Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
USEFUL TIPS
தமிழ்நாடு முழுவதும் கியாஸ் வினியோகஸ்தர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம் ஒரு சிலிண்டர் வைத்து இருப்பவர்களுக்கு உடனடியாக பாதிப்பு ஏற்படும் :
தமிழ்நாடு முழுவதும் கியாஸ் வினியோகஸ்தர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம் ஒரு சிலிண்டர் வைத்து இருப்பவர்களுக்கு உடனடியாக பாதிப்பு ஏற்படும் :
தமிழ்நாடு
முழுவதும் 900 கியாஸ் வினியோகஸ்தர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில்
ஈடுபடுகிறார்கள். ஒரு கியாஸ் சிலிண்டர் வைத்து இருக்கும்
குடும்பத்தினருக்கு உடனடியாக பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.அகில
இந்திய கியாஸ் வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரி தலைவர் பி.ராஜேந்திரா கோவையில் நேற்று
நிருபர்களிடம்கூறியதாவது:-வினியோகஸ்தர்களுக்கு பாதிப்புஇந்தியா முழுவதும்
13 ஆயிரத்து 700 கியாஸ் வினியோகஸ்தர்கள் மூலம் 13 கோடி
வாடிக்கையாளர்களுக்கு மாதந்தோறும் 10 கோடி சிலிண்டர்கள் வினியோகம்
செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் 900 வினியோகஸ்தர்கள் மூலம் 1 கோடியே 30
லட்சம் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 1 கோடி சிலிண்டர்கள் வினியோகம்
செய்யப்படுகிறது.கியாஸ் வினியோகஸ்தர்கள் பல்வேறு சிரமங்களை
சந்தித்து வருகிறார்கள். கியாஸ் சிலிண்டர்களுக்கு சமச்சீரற்ற விலை நிர்ணயம்
காரணமாக முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது. சமையல் கியாஸ் சிலிண்டர்கள்
சரியான முறையில் வடிவமைக்கப்படாததால் சில சமூக விரோத சக்திகள்
திருட்டுத்தனமாக கியாசை உறிஞ்சி வேறு சிலிண்டர்களுக்கு மாற்றி
விடுகிறார்கள். இதுபோன்ற திருட்டை தடுக்கும் வகையில் பாதுகாப்பாக
சீலிடப்பட்ட சிலிண்டர்களை வடிவமைக்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறோம்.விற்பனை
ஒழுங்குபடுத்துதல் வழிகாட்டுதல் என்ற பெயரில் அதிக அளவிலான அபராத தொகையை
வினியோகஸ்தர்களுக்கு விதிப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளன. ஆனால்
எங்களது எந்த கோரிக்கைகளுக்கும் தீர்வு கிடைக்கவில்லை. புதிதாக 4,200
வினியோகஸ்தர்களை உருவாக்கும் முயற்சியினாலும் பாதிக்கப்பட்டுள்ளோம்.900 வினியோகஸ்தர்கள் போராட்டம்எங்களது
கோரிக்கையை வற்புறுத்தி தமிழ்நாடு, புதுச்சேரியில் 900 வினியோகஸ்தர்கள்
25-ந் தேதி (நாளை) முதல் வேலை நிறுத்தம் செய்கிறோம். வர்த்தகம், ஓட்டல்கள்,
மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளுக்கு வினியோகிக்கப்படும் கியாஸ்
சிலிண்டர்கள் வினியோகம் பாதிக்காது. இவை தொடர்ந்து செயல்படும்.வீடுகளுக்கான
கியாஸ் வினியோகம் பாதிக்கப்படலாம். தமிழ்நாட்டில் மாதந்தோறும் வீடுகளுக்கு
ஒரு கோடி சிலிண்டர்கள் வினியோகிக்கப்படுகிறது. இதில் 70 சதவீத
குடும்பத்தினர் இரண்டு சிலிண்டர் வைத்து இருப்பதால் இந்த வேலைநிறுத்தம்
காரணமாக உடனடியாக பாதிப்பு ஏற்படாது.ஒரு சிலிண்டர் குடும்பம்ஆனால்
ஒரு சிலிண்டர் மட்டும் வைத்து இருப்பவர்களுக்கு உடனடியாக சிரமம்
ஏற்படலாம். காலவரையற்ற இந்த போராட்டத்தை வாடிக்கையாளர்கள்
பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். கியாஸ் சிலிண்டர் முன்பதிவு
நிறுத்திவைக்கப்படவில்லை. வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யலாம்.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் எண்ணெய் விற்பனை
செய்யும் நிறுவனங்கள் ஆகியவை இந்த பிரச்சினையில் தலையிட்டு எங்கள்
கோரிக்கைகள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும்.இவ்வாறு பி.ராஜேந்திரா கூறினார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








