முதுகலை ஆசிரியர் வராலாறு பாடத்துக்கான தமிழ்
வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் பட்டியலை டிஆர்பி வாபஸ் பெற்றுள்ளது.
கடந்த 3 ஆம் தேதி 2011-12 ஆண்டுக்கான வரலாறு,வணிகவியல்,பொருளாதரபாடத்துக்கான முதுகலை ஆசிரியர் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள்
பட்டியலை டிஆர்பி வெளியிட்டது. இதில் வராலாறு பாடத்துக்கான பட்டியலை
மட்டும் டிஆர்பி வாபஸ் பெற்றுள்ளது.
இதுகுறித்து டிஆர்பி தனது இணையதளத்தில் RESULT
FOR TAMIL MEDIUM HISTORY IS WITHDRAWN FOR COMPUTER VERIFICATION. என
தெரிவித்துள்ளது.
உரிய கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்ற சிலரது பெயர்
விடுபட்டதே அதற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.எனவே அது
சரிசெய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்படும் என தெரிவருகின்றது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக காத்திருக்கும்
தங்களுக்கு அரசு விரைவில் பணி நியமனம் வழங்கவேண்டும் என தமிழ் வழி
இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்







