பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக VITEEE 2014 நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இன்ஜினியரிங் நுழைவுத்தேர்வு
எனப்படும் (VITEEE 2014) தேர்வை விஐடி பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி
வருகிறது.
இளங்கலை பொறியியல் பட்டப் படிப்பான பி.இ, பி.டெக்., படிப்புக்கு
விண்ணப்பிக்க, இந்த நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
மாணவர்கள் விண்ணப்பிக்க பிப்.,28 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு விஐடி பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.








