முதுகலை படிப்புகளுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ், &'ராஜிவ் தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்&' காஞ்சிபுரத்தை அடுத்த ஸ்ரீபெரும்புதுாரில், செயல்படுகிறது.இந்த நிறுவனம் சார்பில், இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல், உள்ளூர் நிர்வாகம், வாழ்க்கைத் திறன் கல்வி, பாலின கல்வி, மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட பிரிவுகளில், முதுகலை பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது. இந்த நிறுவனத்தில் சேர விரும்பும் மாணவர்கள், ஏப்ரல் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்தவர்களுக்கு, ஏப்ரல், 27ல் நுழைவுத் தேர்வும், அதில் தேறியவர்களுக்கு, மே 16ல், நேர்முகத் தேர்வும் நடத்தப்படும்.முதுகலை பட்டப் படிப்புகளில் சேர பட்டப்படிப்பில், 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு இளங்கலை பட்டம் படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு, 044 - 27163127 என்ற, எண்ணை தொடர்பு கொள்ளலாம்.







