Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயில் கூட்டம் நடத்த கூடாது என்று தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்:
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயில் கூட்டம் நடத்த கூடாது என்று தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்:
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயில் கூட்டம் நடத்த கூடாது என்று தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 3ம் தேதி தொடங்கியது. மொழித்தாள் மற்றும் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் 20ம் தேதியுடன் முடிந்தன. இதையடுத்து 21ம் தேதி முதல் 66 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இந்த பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தொடக்கத்தில்
முதன்மை தேர்வாளர்கள், சிறப்பு அதிகாரிகள் விடைத்தாள் திருத்தினர். இன்று துணை தேர்வாளர்கள் திருத்துகின்றனர். ஏப்ரல் 1ம் தேதி முதல் பாட ஆசிரியர்கள் திருத்துகின்றனர்.
இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் காலை 10 தாளும், மதியம் 10 தாளும் திருத்த அனுமதிக்க வேண்டும், தாள் ஒன்றுக்கு ^30 வரை சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்வுத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அதன் மீது தேர்வுத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தேர்வு மையங்களில் விடைத்தாள் திருத்த தொடங்குவதற்கு முன்னதாக வாயில் கூட்டம் நடத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஆசிரியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இந்த வாயில் கூட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி 12 மணி வரை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்படும் என்று தேர்வுத் துறை கருதுகிறது. மேலும், காலதாமதமாக விடைத்தாள் திருத்த தொடங்கினால் அவசரம் அவசரமாக ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த வேண்டிவரும். அப்போது மதிப்பெண் குறைவாக போடவும், கவனம் இல்லாமல் உரிய மதிப்பெண் வழங்க முடியாத நிலையும் ஏற்படும். பின்னர் மறு மதிப்பீட்டில் அதிக மதிப்பெண் வருவதும் ஆண்டுதோறும் தொடர்கிறது.
இது போன்ற நிகழ்வால் கடந்த ஆண்டில் மட்டும் 700க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை மொமோ கொடுத்துள்ளது. இது போன்ற அவப்பெயரை தடுக்க தேர்வுத் துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் திருத்தும் மையங்களில் வாயில் கூட்டம் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








