வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை,
எஸ்.எம்.எஸ்., மூலம் அறிந்து கொள்ளும் வசதியை, தேர்தல் கமிஷன் ஏற்படுத்தி
உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை அறிய விரும்புவோர்,
"ஞுணீடிஞி' என டைப் செய்து, "ஸ்பேஸ்' விட்டு, புகைப்படத்துடன் கூடிய
வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண்ணை, டைப் செய்து, 94441 23456 என்ற
எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்வோருக்கு, தொகுதி பெயர், அவரது
பெயர், தந்தை பெயர், முகவரி, வாக்காளர் பட்டியல் பாகம் எண், பெயர் வரிசை
எண், ஓட்டுச்சாவடி எண், போன்ற விவரம் தெரிவிக்கப்படும். வாக்காளர்
பட்டியலில், பெயர் இல்லாவிட்டால், "நோ ரெக்கார்ட்ஸ் பவுண்ட். டயல் 1950'
என்று வரும். அந்த எண்ணுக்கு போன் செய்து, விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
இவ்வசதி, நேற்று பகல், 12:00 மணிக்கு, அமலுக்கு வந்தது. இதற்காக, தேர்தல்
கமிஷன், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன், ஒப்பந்தம் செய்துள்ளது. எந்த
மொபைல் போனிலிருந்தும், எஸ்.எம்.எஸ்., செய்யலாம்.