சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மேதமெட்டிக்கல் சயின்ஸ்-யில் Computational Biology துறையின் Ph.D படிப்பிற்கான சேர்க்கை நடைபெறுகிறது.படிப்பின் பெயர்: Ph.D Programme in Computational Biology (பல்வேறு பாடப்பிரிவுகள்)தகுதி: மாணவர்கள் ஏதாவது ஒரு அறிவியல் அல்லது பொறியியல் பிரிவில் பட்டப் படிப்புடன் கணிதத்தில் ஆதித திறன் மற்றும் உயிரியலில் ஆர்வம் உடையவராக இருக்க வேண்டும்.
இத்துடன் Physics, Computer Science பிரிவிற்கான JEST தேர்வு. கணிதப் பிரிவிற்கான NBHM தேர்வு. பொறியியல் பிரிவிற்கான GATE தேர்வு.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பங்களின் பரிசீலனைக்குப் பின் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தாங்கள் விரும்பும் துறைப் பற்றிய விபரம், முழு விபரம் அடங்கிய பயோடேட்டா சான்றுகளின் நகல், சம்மந்தப்பட்ட JEST, NBHM, GATE, NET ஆகிய தேசிய அளவிலான தேர்வின் முடிவு அல்லது அரசு ஊக்கத்தொகை பெறுதல் பற்றிய சான்று போன்றவற்றினை கோரிக்கை கடிதத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மார்ச் 31 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு www.imsc.res.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.







