Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
தமிழக அரசின் தீவிர முயற்சியால் தேவையான மின்சாரம் கிடைக்கிறது 1-ந்தேதி முதல் மின்வெட்டு அடியோடு ரத்து ஜெயலலிதா அறிவிப்பு-தினத்தந்தி
தமிழக அரசின் தீவிர முயற்சியால் தேவையான மின்சாரம் கிடைக்கிறது 1-ந்தேதி முதல் மின்வெட்டு அடியோடு ரத்து ஜெயலலிதா அறிவிப்பு-தினத்தந்தி
தமிழகத்தில் ஜூன் 1-ந் தேதி முதல் மின்வெட்டு அடியோடு ரத்து செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆய்வு கூட்டம்
தமிழ்நாட்டின் மின் நிலைமை குறித்து எனது தலைமையில் 27-ந் தேதி (நேற்று) தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை
அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற
வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், நெடுஞ்சாலை மற்றும்
சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, நகராட்சி
நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச்
செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசின் ஆலோசகர் ஷீலா
பாலகிருஷ்ணன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம், தமிழ்நாடு
மின்சார வாரியத்தின் தலைவர் கு.ஞானதேசிகன், உள்துறை முதன்மைச் செயலாளர்
அபூர்வ வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச்
செயலாளர் கே.பணீந்திர ரெட்டி, வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் சந்தீப்
சக்சேனா, எரிசக்தி துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, மற்றும் அரசு உயர்
அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தேவையும் உற்பத்தியும்
பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில்துறை வளர்சிக்கும் இன்றியமையாததாக
விளங்குவது மின்சாரமே ஆகும். 2011-ம் ஆண்டு மே மாதம் மூன்றாவது முறையாக
நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தின் மின் தேவை 12 ஆயிரம்
மெகாவாட் என்ற அளவில் இருந்தது. ஆனால், கிடைத்த மின்சாரமோ வெறும் 8 ஆயிரம்
மெகாவாட் தான். அதாவது கிடைத்த மின்சாரத்திற்கும், தேவைப்பட்ட
மின்சாரத்திற்குமான இடைவெளி 4 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. மேலும்,
தமிழ்நாடு மின்சார வாரியமும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்து
வந்தது.
நீண்டகால ஒப்பந்தம்
இவற்றையெல்லாம் சீர் செய்வதற்கான பகீரத முயற்சிகளை எனது தலைமையிலான அரசு
எடுத்ததன் விளைவாக, கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரத்து 500
மெகாவாட் அளவுக்கு புதிய மின் உற்பத்தி நிறுவு திறன்
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, 500 மெகாவாட் அளவுக்கு மின்சாரம்
கொள்முதல் செய்ய நடுத்தர கால ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அந்த மின்சாரம்
பெறப்பட்டு வருகிறது. இது தவிர, 3 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரத்தை
நீண்டகால அடிப்படையில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த
மின்சாரம் வரும் ஆகஸ்டு மாதத்தில் இருந்து படிப்படியாக பெறப்படும்.
புதிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாகவும், கொள்முதல் செய்யப்படும்
மின்சாரத்தின் மூலமாகவும் நமக்கு தேவையான மின்சாரம் தற்போது
கிடைக்கப்பெற்று வருகிறது.ஜூன் 1-ந் தேதி முதல்எனவே, கடந்த ஐந்து நாட்களாக தமிழகத்தில் மின் தடை என்பதே இல்லாத நிலை உருவாகியுள்ளது.
வரும் ஜூன் மாதம் முதல் காற்றாலை மூலம் அதிக அளவில் மின்சாரம்
கிடைக்கும். காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும்
பயன்படுத்திட வேண்டும் என்று நான் தமிழ்நாடு மின்சார வாரியத்தை
அறிவுறுத்தியுள்ளேன். ஜூன் மாதம் முதல் கிடைக்கப்பெறும் காற்றாலை
மின்சாரத்தையும் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள
மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும் ஜூன் 1-ந் தேதி முதல் அறவே நீக்க
நான் உத்தரவிட்டுள்ளேன்.
மின் கட்டுப்பாடு நீக்கப்படும்
இதன்படி, தற்போது உயர் மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின்
நுகர்வோர்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைமுறையில் உள்ள 90
சதவீதம் மின் கட்டுப்பாடு 1-ந் தேதி முதல் நீக்கப்படும். இதே போன்று, உயர்
மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு மற்ற நேரங்களில்
தற்போது நடைமுறையில் உள்ள 20 சதவீதம் மின் கட்டுப்பாடும் 1-ந் தேதி முதல்
நீக்கப்படும்.
பெருமிதம்
இதன் மூலம் 1.11.08 முதல் தமிழ்நாட்டில் முந்தைய மைனாரிட்டி தி.மு.க.
ஆட்சியினரால் அமல்படுத்தப்பட்ட மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும்
நீக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த
நடவடிக்கையின் காரணமாக தமிழ்நாட்டில் தொழில் வளம் மேலும் பெருகவும், புதிய
வேலைவாய்ப்புகள் உருவாகவும் வழிவகை ஏற்படும். நான் ஏற்கனவே உறுதி அளித்தபடி
மின் வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை மூன்றே ஆண்டுகளில்
கொண்டு வந்ததில் நான் பெருமிதம் அடைகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








