தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பொறியியல்
படிப்புக்குக்கு சேர விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 27ம் தேதி
செவ்வாய்க்கிழமை கடைசி நாள் ஆகும்.பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி
வரை வழங்கப்படும். விண்ணப்பங்களை வாங்கிய மாணவ, மாணவிகள் தங்களது பூர்த்தி
செய்த விண்ணப்பங்களை மே 27ம் தேதி செவ்வாய்க்கிழமை (நாளை) மாலை 5.30
மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
பொறியியல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடந்த 20–ந்தேதி கடைசி நாளாக
இருந்தது. ஆனால் விண்ணப்பம் வழங்கவும், சமர்பிக்கவும் மேலும் ஒரு வாரம் கால
அவகாசம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








