தமிழகத்தில் பி.எட், எம்.எட் படிப்பு காலம் 2
ஆண்டுகளாக உயர்த்தும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இளநிலை ஆசிரியர்
கல்வியியல் படிப்பான பி.எட் மற்றும் முதுநிலை படிப்பான எம்.எட் ஆகிய
கல்வியியல் படிப்புகளின் காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்த
திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி படிப்புக்கு பிறகு தேசிய சட்ட கல்லூரிகளில் 5
ஆண்டு படிப்பை மேற்கொண்டால் தான் ஒருவர் வழக்கறிஞராக ஆக முடியும்.
ஆனால்
பள்ளி ஆசிரியர் ஆக வேண்டுமானால் ஓராண்டுபடித்தால் போதும் என்ற நிலை உள்ளது. ஒரே ஆண்டில் பி.எட் பட்டத்தையும், எம்.எட் பட்டத்தையும் பெற்றுவிடுகிறார்கள்.<பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான
கல்வி வழங்கவும், சிறப்பாக பயிற்றுவிக்கவும் இந்த ஓராண்டு படிப்பு நிச்சயம்
போதாது. இதனால் பி.எட் மற்றும் எம்.எட் படிப்புகளின் படிப்பு காலத்தை 2
ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த கல்வி
ஆண்டு (2015-=2016) முதல் இரண்டாண்டு பி.எட், மற்றும் எம்.எட் படிப்பு களை 2
ஆண்டுகள் படிக்க வேண்டும் என கல்வியியல் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்
படும். அதேபோல் இந்த புதிய மாற்றத்தை பின்பற்றுவதற்காக போதிய கால அவகாசம்
அளிக்கப்படும். மேற்கண்ட தகவல் அந்த அந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன
முதல்வர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.







