Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
ANNAUNIVERSITY NEWS
570 பொறியியல் கல்லுாரிகளின் செயல்பாடு:10 நாளில் வெளியிட அண்ணா பல்கலை திட்டம்:
570 பொறியியல் கல்லுாரிகளின் செயல்பாடு:10 நாளில் வெளியிட அண்ணா பல்கலை திட்டம்:
தமிழகத்தில்
உள்ள, 570 பொறியியல் கல்லுாரிகளின் கல்வி செயல்பாடுகளை, தேர்ச்சி சதவீத
அடிப்படையில் வெளியிட, அண்ணா பல்கலை, ஏற்பாடு செய்துள்ளது. 2011 முதல்,
2013 வரையிலான, மூன்று ஆண்டு தேர்ச்சி விவரம் வெளியிடப்படும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட
பொதுநல மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி பொறுப்பு) அக்னி ஹோத்ரி, நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்', நேற்று முன்தினம், அதிரடி உத்தரவை பிறப்பித்தது.இரு
வாரங்களில்...'மாணவர்களின் நலன் கருதி, ஒரே மாதிரியான பெயர்களைக்கொண்ட
கல்லுாரிகளின் பட்டியலை, அவற்றின், 'கோடு' எண்ணுடன், தனியாக, அண்ணா பல்கலை
இணையதளத்தில் வெளியிட வேண்டும். அனைத்து வகை பொறியியல் கல்லுாரிகளில்,
மாணவர்கள் பெற்ற தேர்ச்சி சதவீத புள்ளி விவரங்களை, இரு வாரங்களில் வெளியிட
வேண்டும்' என, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது.உயர்
நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, அனைத்து வகை பொறியியல் கல்லுாரிகளின்
தேர்ச்சி சதவீத விவரங்களை தயாரிக்கும் பணியில், அண்ணா பல்கலை மும்முரமாக
ஈடுபட்டுள்ளது.கடந்த, 2002 முதல், 2005 வரையிலும், பின், 2008 முதல், 2010
வரையிலும், பொறியியல் கல்லுாரிகளின் கல்வி செயல்பாட்டின் அடிப்படையில்,
மாணவர்களின் தேர்ச்சி சதவீத விவரங்களை, அண்ணா பல்கலை வெளியிட்டது. பின்,
இந்த நடைமுறையை நிறுத்திக்கொண்டது.தற்போது மீண்டும், தேர்ச்சி சதவீத புள்ளி
விவரங்களை, அண்ணா பல்கலை வெளியிட உள்ளது.கலந்தாய்வில்
முடிவு:பல்கலை வட்டாரம் கூறுகையில், '2011 முதல், 2013 வரையிலான, மூன்று
ஆண்டு களில், 570 பொறியியல் கல்லுாரிகளின் தேர்ச்சி சதவீத விவரங்கள்
வெளியிடப்படும். பல்கலையில், அனைத்து விவரங்களும் உள்ளன. எனவே, 10
நாட்களுக்குள், பல்கலை இணையதளத்தில் (www.annauniv.edu)
பொறியியல் கல்லுாரிகளின் தேர்ச்சி விவரம் வெளியிடப்படும்' என,
தெரிவித்தது.புள்ளி விவரம் வெளியானால், கல்லுாரி களின் தரத்தை, மாணவர்கள்
தெரிந்துகொண்டு, அதற்கேற்ப கலந்தாய்வில் முடிவெடுக்க முடியும் என்பது
குறிப்பிடத்தக்கது
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








