கிணறு வெட்டுனாங்க??? . . .கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதானகாரியமில்லை . பலர்
சேர்ந்து உழைத்து உருவாக்கிடவேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கிணற்றில்தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் .அதே போல்கோடையில் கிணற்றில் நீர்வறண்டு போகும் வாய்ப்பும்உள்ளது .
எளிய இலகுவான தீர்வுகள் இதோ.மனையின் குறிப்பிட்டஏதாவது ஒரு பகுதியில்அதிகளவு பச்சை பசேலென புற்கள்வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்நீரூற்று தோன்றும் என்கின்றனர் .சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்லநீரூற்று என அறிவது எப்படி ?நவதானியங்களை அரைத்து கிணறு வெட்டவேண்டிய நிலத்தில் முதல் நாள்இரவு தூவி விடவேண்டும். அடுத்தநாள் கவனித்தால் எறும்புகள்இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்கொண்டுசென்று சேர்த்தஅடையாளங்கள் , அதாவது தடயங்கள்இருக்குமாம் அந்த இடத்தில்கிணறு வெட்டினால் தூயசிறப்பான நன்னீர் கிடைக்கும்என்கிறார்கள் .சரி தூய நீரும்கண்டு கொண்டாயிற்று. கோடைகாலத்திலும்வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்இருக்கிறது என்று அறிவது எப்படி ?கிணறு வெட்ட இருக்கும் நிலப்பகுதியை நான்கு பக்கமும்அடைத்து விட்டு பால் சுரக்கும்பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேயவிட வேண்டும். பின்னர் அந்தபசுக்களை கவனித்தால் மேய்ந்தபின் குளிர்ச்சியான இடத்தில்படுத்து அசை போடுகின்றனவாம் .அப்படி அவை படுக்கும்இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்கவனித்தால் அவை ஒரே இடத்தில்
தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாதநீரூற்றுக் கிடைக்குமாம்...








