Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
SCHOOL EVENTS
விழுப்புரம் மாவட்ட அரசுப் பள்ளியில் சாதனை மாணவி அஞ்சு!!!அரசினர் உயர் நிலைப் பள்ளி பைத்தந்துறை:
விழுப்புரம் மாவட்ட அரசுப் பள்ளியில் சாதனை மாணவி அஞ்சு!!!அரசினர் உயர் நிலைப் பள்ளி பைத்தந்துறை:
23.05.2014 அன்று வெளியிடப்பட்ட 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாநில அளவில் விழுப்புரம் மாவட்டத்தின் பங்கு உண்டு என்பது நாம் அறிந்தது.இம் மாவட்டம் மிகவும் கல்வி அறிவில் பின்தங்கிய மாவட்டம் என கூரும் நிலையில்,இம் மாவட்டத்தினை கண்டிப்பாக மேல்நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.மார்க்ஸ் அவர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள்(கள்ளக்குறிச்சி,விழுப்புரம், திண்டிவனம்) 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பல்வேறு மாற்றங்களை செயல்படுத்தினர்.அவர்களின் அயராத உழைப்புதான் இன்று மாநில அளவில் முதலிடம்,மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகள் முதலிடம்,அதிக மதிப்பெண்கள் என சொல்லிக்கொண்டே சென்றால் மிகையாகாது. இதற்கிடையில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இருந்து 15கி.மீ தொலைவில் உள்ள ஒரு மலையை ஒட்டிய கிராமம்தான் பைத்தந்துறை.இங்கு உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவி எஸ்.அஞ்சு மாவட்ட அளவில் அரசுப்பள்ளியில் 493 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.இவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம்:தமிழ்-98:ஆங்கிலம்-98:கணிதம்-99:அறிவியல்-99:சமூகவியல்-99:மொத்தம் 493.இம்மாணவி மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவள்.இவர் தந்தை சுப்ரமணியன் இம்மாணவி சிறுவயதிலேயே காலமானவர்.
மொத்தம் நான்கு பெண் பிள்ளைகள் இவள் கடைக்குட்டி.இவர் தாயார் தினசரி கூலி வேலைக்கு சென்றுதான் படிக்கவைக்கின்றார் .பள்ளி ஆசிரியர்கள் இவரைப்பற்றி கூறும்போது படிப்பில் படுசுட்டி என்றும் எந்த பாடமாக இருந்தாலும் ஆசிரியர் சொல்வதை அப்படியே செய்யும் மாணவி என்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் செல்லப்பிள்ளை என்றும் கூறுகின்றனர்.இம் மாணவி கண்டிப்பாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாநில அளவில் இடம் பிடிப்பார் என்பதில் அய்யம் இல்லை. இம் மாணவியை மாவட்ட ஆட்சியர் திரு.சம்பத் அவர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.மார்க்ஸ் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி.கோ.தனமணி அவர்கள் நேரில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.அரசுப் பள்ளியிலும் கண்டிப்பாக சாதிக்க முடியும் சரியான மாணவர்கள் அமைந்தால் என்பதற்கு உதாரணம்தான் இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.முடிவாக இம் மாணவி அஞ்சுவை உருவாக்கிய பைத்தந்துறை பள்ளியின் தலைமை ஆசிரியர்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்விக்குரலின் நெஞ்சாந்த வாழ்த்துக்கள்...
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








