பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதுவதற்கு உரிய நேரத்தில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ஜூன் 4, 5 தேதிகளில் சிறப்பு அனுமதி திட்டத்தின் (தத்கல்) கீழ் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.இந்தத் தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தங்களது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஜூன் 4, 5 ஆம் தேதிகளில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழின் நகலைப் பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தேர்வுக் கட்டணம், பதிவுக் கட்டணத்துடன் சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வு எழுத முடியாத அனைத்துப் பாடங்களிலும் இந்த சிறப்புத் துணைத்தேர்வில் தேர்வு எழுதலாம்.







