Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
IAS IPS RESULTS
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு தமிழக அரசு பயிற்சி மையத்தில் படித்த 57 பேர் தேர்வு:
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு தமிழக அரசு பயிற்சி மையத்தில் படித்த 57 பேர் தேர்வு:
ஐ.ஏ.எஸ்.,
ஐ.பி.எஸ். போன்ற அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு
முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், தமிழக அரசு பயிற்சி மையத்தில்
படித்த 57 பேர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.சிவில் சர்வீசஸ்நாடு
முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற அகில இந்திய பணிகளுக்கான
சிவில் சர்வீசஸ் தேர்வுகளை ஆண்டுதோறும் மத்திய அரசாங்க தேர்வாணை யம் நடத்தி
வருகிறது.
இந்த பணிகளுக்காக மூன்று கட்டங் களில் விண்ணப்பதாரர்கள்
வடிகட்டப்படுகிறார்கள். முதலில், 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்
முதல்நிலை என்று கூறப்படும் பிரிலிமினரி தேர்வு நடந்தது. இதில் தேர்வு
பெற்றவர்கள் முதன்மை தேர்வு என்று அழைக்கப்படும் மெயின் தேர்வில்
கலந்துகொள்ள அழைக்கப்பட்டார்கள். மெயின் தேர்வில்
வெற்றிபெற்றவர்கள், கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடந்த சில நாட்கள் முன்பு வரை
நடந்த நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டார்கள். பணி பயிற்சிக்கு...அந்த
வகையில், இந்த ஆண்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களில், 1,122
பேர்கள் பணிக்காக தேர்வு பெற்றுள்ளனர். இனி இவர்கள் நேரடியாக முசோரிக்கு
பணி பயிற்சிக்கு செல்வார்கள். இதுவரையில் இல்லாத அளவு இந்த ஆண்டுதான்
இவ்வளவு அதிக எண்ணிக்கையில் சிவில் சர்வீசஸ் பணிகளுக்காக தேர்ச்சி
பெற்றுள்ளனர். 2009-ம் ஆண்டில் 580 பேர்கள்தான் தேர்வு பெற்றனர்.முதல் 3 இடங்களை கவுரவ் அகர்வால், முனிஷ் ஷர்மா, ரச்சித் ராஜ் ஆகியோர் பெற்றுள்ளார்கள். தேர்வானவர்களில்
517 பேர்கள் பொதுப்பட்டியலின் கீழும், 326 பேர்கள் இதர பிற்படுத்தப்பட்ட
வகுப்பிலும், 187 பேர்கள் தாழ்த்தப்பட்டவர்களிலும், 92 பேர்கள் மலைவாழ் இன
மக்களிலும் அடங்குவார்கள். ஐ.ஏ.எஸ். பணிக் காக 180 பேர்களும், 32 பேர்கள்
ஐ.எப்.எஸ். என்ற இந்திய வெளிநாட்டு பணியிலும், 150 பேர்கள் ஐ.பி.எஸ்.
பணிக்காகவும் தேர்வு பெற்றுள்ளனர். மற்றவர்கள் இதர பணிகளிலும் சேருவார்கள்.தமிழகத்தில்இந்த
1,122 பேர்களில், தமிழக அரசுக்கு சொந்தமான அகில இந்திய குடிமை பணிகள்
பயிற்சி நிலையத்தில் 140 பேர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு,
நேர்முகத்தேர்வுக்கு அனுப்பப்பட்டனர். அதில், 17 பெண்களும், 40 ஆண்களும் ஆக
மொத்தம் 57 பேர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு வெற்றிபெற்றுள்ளனர். இந்த
57 பேர்களில், ஜெயசீலன் அகில இந்திய அளவில் 45-வது இடமும்,
கே.பி.கார்த்திகேயன் 69-வது இடமும் பெற்றுள்ளனர். 1984-ம் ஆண்டு தமிழக அரசு
தொடங்கிய இந்த பயிற்சி நிலையத்தில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக 57
பேர்கள் இந்த ஆண்டு தேர்வுபெற்றுள்ளனர். தேர்வு பெற்ற 57 பேர்களுக்கும், அண்ணா மேலாண்மை பயிற்சி இயக்குனர் வெ.இறையன்பு பாராட்டு தெரிவித்தார். Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








