Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி பள்ளி மாணவர்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி பள்ளி மாணவர்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி
அரசுமேல்நிலைப்பள்ளி பிளஸ்&2 மாணவர்கள் 50 பேர் நேற்று காலை
கலெக்டரிடம் புகார் மனு அளிக்கவந்தனர். உடனே மாவட்ட முதன்மைக்கல்வி
அலுவலரின் நேர்முக உதவியாளர் சண்முகம், கண்காணிப்பாளர் புருஷோத்தமன்
ஆகியோர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாணவர்களிடம் பிரச்னை
குறித்து கேட்டறிந்தனர். 
அப்போது மாணவர்கள்
கூறுகையில், எங்களது பள்ளியில் சுமார் 1300 மாணவ, மாணவிகள் படித்து
வருகின்றனர். 11, 12ம் வகுப்பில் 800 மாணவர்கள் உள்ளனர். இந்நிலையில் பள்ளி
தலைமை ஆசிரியர் பாஸ்கரன் மாணவர்களிடம் ஒழுகீனமாக நடந்து கொள்கின்றார்.
எங்களுக்கு வந்த கல்விஉதவித்தொகையை வழங்க எங்களிடம் லஞ்சம் கேட்கிறார்.
பிளஸ்&2
மாணவர்களுக்கு வந்த கல்வி உதவித்தொகை ரூ.2,700ல் ரூ.500 எடுத்துக்கொண்டு
மீதி ரூ.2,200 தருகிறார். அதே போல் பிளஸ்&1 சேர்க்கைக்கு வரும்
மாணவர்களிடமும் பணம் வசூலிக்கின்றார். ஒரு மாணவரின் தந்தை மாட்டு வண்டி
வைத்திருக்கிறார். அவரிடம் பள்ளிக்கு இரண்டு வண்டி மணல்
அடித்துக்கொடுத்தால்தான் உன் மகனை பள்ளியில் சேர்ப்பேன் என்று கூறுகிறார்.
மேலும்
பள்ளியில் ஆசிரியர் பயிற்சிக்கு வருபவர்களிடமும் பள்ளிக்கு உபகரணங்கள்
வாங்க வேண்டும் என்று பணம் வசூலிக்கின்றார். இச்சம்பவம் நீண்ட காலமாக
நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு
கலெக்டர் சம்பத் திடீர் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள் குறைகள்
இருந்தால் புகார் மனு மூலம் தெரிவிக்கலாம் என்றார். அதனடிப்படையில் தற்போது
பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி மனு அளிக்க வந்தோம். என்றார்.
இதனைக்கேட்ட கல்வித்துறை அதிகாரிகள் கல்வி உதவித்தொகை மாணவர்களின்
வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். உங்களது பணத்தை யாரும்
கேட்கமாட்டார்கள். தலைமை ஆசிரியரை மாற்றுவது தொடர்பாக சிஇஓவிடம் தெரிவித்து
நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆனால் மாணவர்கள் கல்வித்துறை
அதிகாரிகளின் பேச்சை ஏற்காமல் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இச்சம்பவத் தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாணவர்கள்.
அரசு பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி கலெக்டரிடம் மனு
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








