பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான ரேண்டம் எண்
வெளியிடப்பட்டுள்ளது. தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் இந்த
ரேண்டம் எண்களை வெளியிட்டார்.
இந்த 2014ம் ஆண்டிற்கான பொறியியல்
சேர்க்கை தொடர்பான கவுன்சிலிங் பணிகளை அண்ணா பல்கலை மேற்கொண்டு வருகிறது.
விண்ணப்ப விற்பனை மற்றும் சமர்ப்பித்தல் செயல்பாடுகள் அனைத்தும் முடிந்து
விட்டன.
கவுன்சிலிங் செயல்பாடுகள் குறித்த தேதி அட்டவணையும் வெளியிடப்பட்டு
விட்டன. கவுன்சிலிங் நடவடிக்கையின் ஒரு முக்கிய கட்டமாக, ரேண்டம் எண்கள்
ஜுன் 11ம் தேதியான இன்று வெளியிடப்பட்டுள்ளன.
இந்த எண்களை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் வெளியிட்டார்.
மாணவர்கள், ரேண்டம் எண்கள் குறித்த விபரங்களை, அண்ணா பல்கலையின்
அதிகாரப்பூர்வ இணையதளமான www.annauniv.edu என்ற தளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.







