ஆசிரியர் இடமாற்ற வழக்கு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மதிப்பது இல்லை DINAKARAN: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


ஆசிரியர் இடமாற்ற வழக்கு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மதிப்பது இல்லை DINAKARAN:

நீதிமன்றத்தை அதிகாரிகள் மதிக்காதது வேதனை அளிக்கிறது என்று உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.சென்னை உயர் நீதிமன்றத்தில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆசிரியர் தேர்வு வரி யம் மூலம் நான் உள்பட சுமார் 100 பேர், ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டோம். 2006ல் தேர்வு செய்யப்பட்ட எங்களுக்கு மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.இந்த 3 மாவட்டங்களில் சுமார் 280 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சிறுபான்மையினர் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த துறையின் கீழ் இயங்கும் பள்ளியில் பணியாற்றும் எங்களை, மற்ற மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். இந்த மனுவை நீதிபதி கிருபாகரன் விசாரித்து, எங்களை வேறு மாவட்ட அரசு பள்ளிக்கு மாற்ற பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை அமல்படுத்தாததால் அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து எங்களுக்கு இடமாற்றம் வழங்க உத்தரவிட்டது.அதன்பிறகும் அதிகாரிகள் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கவில்லை. எனவே உயர் நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதி கிருபாகரன் விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவு:‘‘உயர் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இப்படி அதிகாரிகள் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், மக்களிடம் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும். நீதி நிர்வாகத்தில் குறுக்கீடு செய்வது போலாகிவிடும். அதிகாரிகள் கோர்ட் உத்தரவை மதிப்பது இல்லை. இதை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதி பரிபாலனம் சரியாக செய்ய முடியாது. அதிகாரிகள் செயல் நீதித்துறைக்கு ஆபத்தாகவிடும். எனவே வரும் 23ம் தேதி பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரன் முருகன், பிற்பட்டோர் நலத்துறை ஆணை யர் அசோக் டோங்க்ரே ஐ.ஏ.எஸ் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H