உயர்நீதி மன்றம்
வழங்கிய 5% தளர்வு சரியானதே என்ற தீர்ப்பை எதிர்த்து அமர்வு நீதிமன்றத்தில்வழக்குத்
தொடரப்பட்டது.
அதற்கான விளக்கம்
அளிக்க தமிழக அரசுக்கு 4 வார காலம் அவகாசம்கொடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
இந்த வாரத்தோடு
4 வாரகாலம் முடிவடைகிறது.அதாவது கடந்த 09/05/2014 அன்றுதான் வழக்கு பதியப் பட்டது.
இனிமேல் இதற்கான வாத, பிரதிவாதங்கள் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.இந்த வழக்கில் அரசு
என்ன விளக்கம் அளிக்கப் போகிறது.மனுதாரர் எந்த
விதமான வாதத்தை முன் வைக்கப் போகிறார் என்று மிக சரியாக கூற முடியாது.
ஆனால் நீதிபதி
நாகமுத்து 5% தளர்வு சரியானதே எனத் தீர்ப்பு வழங்கும் முன் மனுதாரரின் வழக்கறிஞரிடம்
கேட்ட கேள்வி என்னவெனில்
" இது தகுதித்
தேர்வுதான்.இந்த தகுதித் தேர்வில் 82-89 பெற்றவர்கள்
தகுதி பெற்றதாக அறிவித்தால் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் தகுதியை இழக்கிறார்களா?" என்பதே!
அதற்கு மனுதாரரின் வழக்கறிஞர் இல்லை என்று பதிலளித்தார்.அப்படித்தான்
பதிலும் அளிக்க முடியும்.அதற்குமேல் மனுதாரரின் வழக்கறிஞருக்கு வாதாட வாய்ப்பு அளிக்கவில்லை.
எனவே 82-89 பெற்றவர்கள்
தகுதி உடையவர்களே என்ற தீர்ப்பளித்தார்.
மனுதாரர் வழக்கறிஞர்
எதை முன் வைத்து வாதாட போகிறார்?
இந்திய சட்டம்
IPC ARTICLE 16 இன் படி அரசு வேலை பெறும்போது மற்றவர்கள் யாரும் பாதிப்படைய கூடாது.
நீதிபதி நாகமுத்து
நீதிமன்றத் தீர்ப்பு வழங்கும் போது 82-89 பெற்றவகள் qualifying ஆனால் நீங்கள்
disqualifying ஆகப் போவதில்லை.எனவே they are also eligible.என்று தீர்ப்பு வழங்கினார்.
ஆனால் இப்போதைக்கு
உள்ள G.O MS 71 முறைப்படிG.O MS 181 இன் படி 60% மேல் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிப்புக்குள்ளாகும் சூழல்
உருவாகிறது.இது போன்ற காரணங்களை முன்வைத்து தனது வாதத்தை முன் வைக்கலாம்.
ஒரு வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போது எந்த ஒரு
நிலையிலும் அந்த வழக்கோடு தொடர்புடைய ஒருவர் தன்னையும் அந்த வழக்கில் சேர்த்து கொள்ளும்படி
மனு அளித்து அந்த வழக்கின் வாதி அல்லது பிரதிவாதி ஆகலாம்.இதன் மூலம் அவர் தன் பக்கமுள்ள
நியாயங்களை எடுத்துரைக்கும் வாய்ப்பினை பெறுவார்.
அந்த வகையில் தான்
இன்றும் வழக்கறிஞர் திரு சங்கரன் அவர்களிடம்
சிலர் அனுகியதாக தெரிகிறது.
weightage குறித்த
வழக்கு
weightage கணக்கிடும் முறையிலிருந்து +12 மதிப்பெண்ணை நீக்க வேண்டும்
என்று கோரிக்கை வைக்கின்றனர்.
seniority க்கு
மதிப்பெண் வழங்க வேண்டும்,பனியனுபவத்திற்கு மதிப்பெண் வேண்டும் என்று கோரிக்கை வைத்தாலும்
இதுவரை இது குறித்து எந்த வழக்கும் பதியப்படவில்லை.
உண்மையில்
slab system எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காடிய போது கூட எந்த வழக்கறிஞரும் +12 மதிப்பெண்ணை
நீக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைக்கவில்லை.
ஆனால் இனிமேல்
weightage குறித்த G.O எண் மாறாது என்பது என் கணிப்பு.
ஏனெனினும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டோர் TET தேர்வில்
தேர்ச்சி பெற்று இருந்தால் அவர்களுக்கு சிறப்பு
தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்
ஆனால் இந்த பரமபத ஆட்டத்தில் பாம்பிற்கு பலியாக போவது
யாரென்றுதான் தெரியவில்லை.
வழக்குகளின் நிலை
குறித்து தகவல் தந்த mr&mrs விஜயகுமாருக்கு
நன்றி







