பள்ளிக் கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ,இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் மேற்படிப்புகளுக்கான முன் அனுமதியினை தலைமை ஆசிரியரே வழங்கலாம்என்ற அரசாணை 12.04.2001ல் உள்ளது.ஆனால் தற்பொழுது பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில் ஊக்க ஊதியம் சென்ற ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.அதுசமயம் எம்.பில் தொலை நிலை வழியில் இல்லாததால் ஆசிரியர்கள் பகுதி நேர வழியில் எம்.பில் பயின்று கொண்டு இருக்கின்றனர்.09.07.2014 அன்று கல்விக்குரலில் 02.11.2007க்கு
முன்னர் அனுமதி இன்றி எம்.பில் படிப்பில் சேர்ந்து 02.11.2007க்கு பின்னர்
தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்குபுதிய
சிக்கலா??? என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரைக்கு விளக்கம்மாக இந்த அரசாணையில் முதுகலை மற்றும் தலைமை ஆசிரியர்கள்,கண்டிப்பாக அனுமதியினை இயக்குனரிடம் பெறவேண்டும்.
பட்டதாரி ஆசிரியர்கள் அன்றைய காலகட்டத்தில் (02.11.20017) தலைமை ஆசிரியரிடம் எம்.பில் முன் அனுமதி பெற்றால் போதுமானதே.ஆனால் தற்போது பகுதிநேரம் வழியாக எம்.பில் படிப்பினை தொடருபவர்கள் கண்டிப்பாக இயக்குனரின் அனுமதியினை பெறவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.