திருச்சி
பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் பூர்த்தி
செய்யப்பட்ட எம்.எட். விண்ணப்பங்களை
அளிக்கஆகஸ்ட் 14-ம் தேதி வரை
காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து
பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார்
சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் முதுகலை
கல்வியியல் (எம்.எட்) படிப்பு
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் ஜூன் 30-ம் தேதி
முதல் வழங்கப்பட்டு வருகிறது.அரசு அங்கீகாரம் பெற்ற
பள்ளிகளில் பி.எட். பாடத்தில்
50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று, 2 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள்
மட்டுமே இப்படிப்பில் சேர தகுதியுடையவர்கள்.
பல்கலைக்கழகத்
தொலைநிலைக் கல்வி மையம், உறுப்புக்
கல்லூரிகள், அனைத்துப் பயிற்சி மையங்கள், படிப்பு
மையங்களில் ரூ.500-க்கான வங்கி
வரைவோலையை அளித்து விண்ணப்பங்களைப் பெற்றுக்
கொள்ளலாம்.விண்ணப்பங்களை பல்கலைக்கழக வலைதளத்தின்
http://www.bdu.ac.in/cde_admission.php மூலம்
பதிவிறக்கம் செய்து கொள்பவர்கள் ரூ.500-க்கான வங்கி வரைவோலையையும்
சேர்த்து அனுப்ப வேண்டும்.பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 31-ம் தேதிக்குள்
அளிக்கலாம் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்த
நிலையில், விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம்
தேதி கடைசிநாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவுத்தேர்வு ஆகஸ்ட்
31-ம் தேதி நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு 0431-2407027,28,54.







