Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
SCHOOLS UPGRADE
தாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீடு செய்யப்படும் நிதி ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படும் முதல்வர் அறிவிப்பு:
தாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீடு செய்யப்படும் நிதி ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படும் முதல்வர் அறிவிப்பு:
"புதிதாக 1,382 ஆசிரியர் பணியிடங்கள்' தமிழகத்தில் புதிதாக 1,382ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர்ஜெயலலிதா அறிவித்தார்.மேலும் தாய், தந்தையை இழந்தமாணவர்களின் கல்விக்காக வைப்பீடு செய்யப்படும் நிதி ரூ.50ஆயிரத்திலிருந்து ரூ.75ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
இது குறித்து சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர்ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:
நிகழ் கல்வியாண்டில் 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோரும்பழங்குடியினரும் அதிகமுள்ள 128 குடியிருப்புப் பகுதிகள்கண்டறியப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகளுக்கு தலா ஒரு தொடக்கப் பள்ளி வீதம் 128 பள்ளிகள்தொடங்கப்படும். இதற்கென 256 ஆசிரியர்கள் (ஒரு தலைமைஆசிரியர், ஓர் இடைநிலை ஆசிரியர்) நியமிக்கப்படுவர். இந்தப்பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மூன்று கி.மீட்டருக்குஒரு நடுநிலைப் பள்ளி அவசியம். அதன்படி, பள்ளிகளின் தரம்உயர்த்தப்பட்டு வருகின்றன. நிகழாண்டில் 19 மாவட்டங்களில் 42தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும்.இதற்கென 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.
மேலும், நிகழ் கல்வியாண்டில் 50 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இந்தப் பள்ளிகளுக்கென50 தலைமை ஆசிரியர்கள், 250 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம்300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும்.
1,000 பணியிடங்கள்: கடந்த மூன்று ஆண்டுகளில் 300 அரசு,மாநகராட்சி, நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
நிகழ் கல்வியாண்டில் 100 பள்ளிகள் அதுபோன்று தரம்உயர்த்தப்படுகின்றன. இதற்கென 900 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள், 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம்ஆயிரம் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.
வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை விபத்தில் இறந்தாலோ,நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அவர்களுடைய குழந்தைகள்கல்வியைத் தொடர்ந்து கற்கும் வகையில், ரூ.50 ஆயிரம் வைப்பீடாகவைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தொகை ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அதிலிருந்துகிடைக்கும் வட்டித் தொகையும் அதன் முதிர்வுத் தொகையும்மாணவ-மாணவியரின் கல்விச் செலவு, பராமரிப்புக்காகப்பயன்படுத்தப்படும்.
கழிவறைகள் பராமரிப்பு: தமிழகத்தில் கழிவறைகள் இல்லாத 2ஆயிரத்து 57 பள்ளிகளுக்கு கழிவறை வசதிகள் செய்யப்பட்டன.இந்தக் கழிவறைகளைப் பராமரிக்க ரூ.160.77 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்படும். இதனால், 56 லட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவியர்பயன் பெறுவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








