''சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்புவோருக்கு, தமிழ் புத்தாண்டு அன்று, இளங்கோவடிகள் விருது வழங்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.சட்டசபையில், நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
இளங்கோவடிகள்
நடையையொட்டி, புதிய காப்பியம் படைப்போருக்கோ, சிலப்பதிகாரத்தின் புகழ்
பாடுவோருக்கோ, இளங்கோவடிகள் விருது வழங்கப்படும். தமிழ் புத்தாண்டு அன்று
வழங்கப்படும் இந்த விருது, 1 லட்சம் ரூபாய் ரொக்கம், 1 சவரன் தங்கப்
பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை உள்ளடக்கியது.
# தமிழ்
வளர்ச்சிக்குப் பாடுபடும், ஆர்வலர்களைக் கண்டறிந்து, அவர்களைப்
பெருமைப்படுத்தும் வகையில், தமிழ் செம்மல் விருதுகள் வழங்கப்படும். இந்த
விருதுக்கு, மாவட்டத்துக்கு ஒருவர் தேர்வு செய்யப்படுவர். இது, 25 ஆயிரம்
ரூபாய் ரொக்கம், தகுதியுரை விருது உள்ளடக்கியது.
# தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில், 15 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
# சென்னை உலக தமிழ்
ஆராய்ச்சி நிறுவனத்தில், சுடுமண், சுதை சிற்பம், மரம், கல், உலோகம்
ஆகியவற்றைக் கொண்டு, படிமங்களாக வடிவமைத்த, கலைப் பொருட்களைக் கொண்டு,
பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம், 2.50 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.
இவ்வாறு, அவர் அறிவித்தார்.







