Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
விவேகானந்தர் இல்ல வளாகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் கட்டியுள்ள விவேகானந்தர் பண்பாட்டு மையம் ஜெயலலிதா திறந்து வைத்தார்:
விவேகானந்தர் இல்ல வளாகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் கட்டியுள்ள விவேகானந்தர் பண்பாட்டு மையம் ஜெயலலிதா திறந்து வைத்தார்:
சென்னை,
காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்ல வளாகத்தில் தமிழ்நாடு
அரசின் நிதி உதவியோடு ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் நிர்வாகத்தின் சார்பில்
கட்டப்பட்டுள்ள விவேகானந்தர் பண்பாட்டு மையத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா
திறந்து வைத்தார்.நிர்வாகிகள் கோரிக்கைஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-சுவாமி
விவேகானந்தரால் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ண மடம் மிகச் சிறந்த மக்கள் சேவையை,
நாட்டுப் பணியை, ஆன்மீகப் பணியை ஆற்றி வருகிறது. ராமகிருஷ்ண மடத்தின்
மக்கள் சேவையையும், சமூகப் பணிகளையும் கருத்தில் கொண்டு, அரசுக்கு சொந்தமான
விவேகானந்தர் இல்லம் அமைந்துள்ள இடத்தினையும், அதன் அருகில் காலியாக உள்ள
நிலத்தையும் நீண்ட கால குத்தகை அடிப்படையில் அளிக்குமாறு அதன் நிர்வாகிகள்
கோரிக்கை விடுத்தனர்.
ஜெயலலிதா அறிவிப்புஇந்த வேண்டுகோளை
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடனடியாக ஏற்று, 99 ஆண்டு கால குத்தகை
அடிப்படையில், மிகக் குறைந்த வாடகையில் விவேகானந்தர் இல்லத்தையும், அதை
ஒட்டியுள்ள காலி நிலத்தினையும் ராமகிருஷ்ண மடத்திற்கு அளித்தார்.மேலும்,
சென்னை, விவேகானந்தர் இல்லத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதியன்று
நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டு விழாவை
முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடக்கி வைத்து, சுவாமி விவேகானந்தர் பண்பாட்டு
மையத்திற்கு அடிக்கல் நாட்டி, ‘‘விவேகஜோதி’’ தீபம் ஏற்றி வைத்து, சுவாமி
விவேகானந்தர் அவர்களின் புகைப்படத் தொகுப்பு நூலை வெளியிட்டு, தேசிய இளைஞர்
தினப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்கி
ஆற்றிய சிறப்புரையில், சுவாமி விவேகானந்தர் பண்பாட்டு மையத்திற்கு
தமிழ்நாடு அரசின் சார்பில் 2 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.அதன்படி,
முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதியன்றே சுவாமி
விவேகானந்தர் பண்பாட்டு மையம் கட்டுவதற்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
செய்து ஆணையிட்டார்.பண்பாடு வளர்ச்சிப் பயிற்சிசுவாமி
விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டு விழாவினையொட்டி 8 ஆயிரம் சதுர அடி
பரப்பளவில் கட்டப்பட்டுள்ள விவேகானந்தர் பண்பாட்டு மையத்தில் கணினி
நூலகம், புத்தக விற்பனை நிலையம் ஆகியவை செயல்படுவதோடு இங்கு ஆளுமை
வளர்ச்சியை மேம்படுத்திட தியானம், ஆக்கபூர்வமான சிந்தனை, நேர மேலாண்மை
ஆகியவை பற்றி சொற்பொழிவுகள், இளைஞர் சக்தி மேம்பாட்டிற்காக வேலைவாய்ப்பு
அறிவுரைகள், மேற்படிப்பு ஆலோசனை, சுயவேலைவாய்ப்பு, தீயபழக்கங்களிலிருந்து
விடுபட ஆலோசனை ஆகியவையும்; தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி
ஆகிய மொழிப் பாடங்களை பயிற்றுவித்தல்; மதம், பண்பாடு, சரித்திரம்,
சமூகவியல் தொடர்பான ஆய்வுகள், கலாசாரம், சமூகப் பணி, நிர்வாகம் தொடர்பான
கருத்தரங்குகள், தொழிற் பயிற்சி போன்ற பல்வேறு பண்பாட்டு வளர்ச்சி பணிகள்
மேற்கொள்ளப்படும்.திறந்து வைத்தார்சென்னை, காமராஜர் சாலையில்
அமைந்துள்ள விவேகானந்தர் இல்ல வளாகத்தில் தமிழ்நாடு அரசின் நிதி உதவியோடு
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் நிர்வாகத்தின் சார்பில் 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில்
3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விவேகானந்தர் பண்பாட்டு
மையத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் 8-ந் தேதி காணொலிக்
காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், தலைமைச்
செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா
பாலகிருஷ்ணன், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் சுவாமி ஆசுதோஷானந்தா,
சுவாமி சுகதேவானந்தா, சுவாமி விமூர்த்தானந்தா, சுவாமி தர்மிஷ்டானந்தா
ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








