சென்னைப்
பல்கலைக்கழகத்தின் 157-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு
பட்டங்களைப் பெறுவதற்கு ஆராய்ச்சிப் படிப்பை முடித்த மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னைப் பல்கலைக்கழகத்தின் 157-வது ஆண்டு விழா வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
ஆராய்ச்சிப் படிப்பை
முடித்த மாணவர்கள் இதில் கலந்து கொண்டு முனைவர் (பி.ஹெச்.டி.)பட்டங்களை
பெறுவதற்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக விசாரணை மையத்தில் பெற்றுக்
கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம்
ரூ. 25 ஆகும். விண்ணப்பங்களை தபாலில் பெற விரும்புவோர் பதிவாளர், சென்னைப்
பல்கலைக்கழகம் என்ற முகவரிக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் ரூ. 25-க்கு
வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.
வரைவோலையுடன் பதிவாளர், சென்னைப் பல்கலைக்கழகம் என்ற முகவரிக்கு சுய விலாசமிட்ட உறையையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 18 ஆகும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







