I . சுவாமி விவேகானந்தர்- 1893ம் ஆண்டு சிகாகோ சமய பாராளுமன்றம் என்ற இணையே சரியானது. ஆனால் அதற்கு II . எம்.எஸ்.சுப்புலட்சுமி-என்ற விடை தரப்பட்டது அபத்தம்.
எந்த நூல் ஒட்டக்கூத்தர் எழுதியது அல்ல? என்ற கேள்விக்கு
B )சரஸ்வதி அந்தாதி . C ) யாப்பருங்கலம் என இரு விடைகள் பொருந்தி வருகின்றன. ஆனால் C மட்டுமே விடையாக தரப்பட்டுள்ளது. இதில் யாப்பருங்கலம் அமிதசாகரராலும், சரஸ்வதி அந்தாதி கம்பராலும் எழுதப்பட்ட நூல்கள் ஆகும் .( காண்க : சமச்சீர் கல்வி 10ம் வகுப்பு தமிழ் புத்தகம் பக்கம் எண் 65.)
2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மாநில மக்கள் தொகையினை பொருத்தக் கேட்டிருந்தார்கள். அதில் 3 1 4 2 எனப் பொருத்துவதே சரியான விடையாகும். ஆனால் அத்தகைய OPTION எதுவும் விடையில் இல்லை . ( சரியான விடைக்கு காண்க : சுரா இயர் புக் 2013. பக்கம் 539). இதுவும் கூட PROVISIONAL POPULATION அடிப்படையில் பார்த்தால் மட்டுமே சரியாக வரும். FINAL POPULATION DATA படி பார்த்தால் ஒன்று கூட பொருந்தவில்லை.
பொதுத் தமிழில் இடம் பெற்றிருந்த "He is Prince among the Tamil poets" என்று வீரமாமுனிவர் பாராட்டிய புலவர் யார்? என்ற கேள்விக்கு பதில் திருத்தக்கத்தேவர் தான் என்றாலும் கேள்வியே தவறு என்ற வாதத்துக்கும் ஆதாரம் உள்ளது.
சிறுகதைகள் - ஆசிரியர்கள் குறித்த சரியான இணை காணும் கேள்வியில் துடிப்பு-கோமகன் என்பது கோமகள் என்றே இருக்கவேண்டும் . இது மிகவும் ஆழ்ந்த அளவில் கேட்கப்பட்ட வினாவாகும். இதற்கான விடை தேடி புரட்டியபோது அறிஞர் அண்ணாவால் எழுதப்பட்ட மொத்த சிறுகதைகளின் எண்ணிக்கை 106 என்ற பட்டியல் நம்மை வியப்பில் ஆழ்த்தியது.
1923ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்ற பிறகு யார் சென்னை மாகாண முதல் மந்திரியாக பொறுப்பேற்றார்? என்ற கேள்விக்கு TNPSC யால் தரப்பட்ட விடை ராமராயநிங்கர் என்பது சரியே. ஆனால் இதற்கு சமச்சீர் கல்வி புத்தகத்தில் டி.என்.சிவஞானம்பிள்ளை என அச்சிடப்பட்டுள்ளது. இது சமச்சீர் கல்வி புத்தகத்தின் தவறேயாகும். அதை வைத்து சிலர் அந்த விடையை தேர்வு செய்துவிட்டார்கள். உண்மையில் டி.என்.சிவஞானம்பிள்ளை எந்த காலத்திலும் முதல் மந்திரி பதவி வகித்தவர் அல்லர். அவர் வளர்ச்சித்துறை அமைச்சராக மட்டுமே பணியாற்றினார் .
IGOANPS பற்றிய STATEMENT கேள்வியில் SPELLING தவறு இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. அது IGNOAPS (Indhira Gandhi National Old Age Pension Scheme) என்றே இருந்திருக்கவேண்டும். இதைப் படித்த பலரும் புரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்கள்.








