பட்டதாரி
ஆசிரியர் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு
1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.'பள்ளிக் கல்வி மற்றும்
தொடக்கக் கல்வித் துறையில், 10,726 பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என்று
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு
பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
அந்த வகையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய
மொழிப் பாடங்கள் நீங்கலாக மற்ற பாடப் பிரிவுகளை
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏறத்தாழ
1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.பட்டதாரி ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச கல்வித்
தகுதியான இளங்கலை பட்டப் படிப்பையும்,
பிஎட் படிப்பையும் தமிழ் வழியில் படித்தவர்கள்
மேற்கண்ட காலி இடங்களுக்கு தகுதிபெறுவார்கள்.
அவர்கள்
10ம் வகுப்பு, பிளஸ் 2 கல்வித் தகுதியை
தமிழ்வழி அல்லது ஆங்கில வழிஎந்த
வழியில் படித்திருந்தாலும் பரவாயில்லை. பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை தமிழ்
வழியில் படித்திருக் கிறார்களா என்பது மட்டும் இந்த
20 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு பார்க்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு
வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட இதர துறைகளில்,பட்ட தாரி ஆசிரியர் பணிக்கு காலி இடங் கள் வரவேண்டியுள்ளது. அந்த துறைகளில் காலி இடங்கள் வரும் பட்சத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...