சென்ற தகுதித்
தேர்வில் தோற்ற கணத்த மனதோடு வழிந்த கண்ணிரையும் அரைகுறையாக துடைத்து கொண்டு வெறிஅடங்கிய லட்சியதுடன் புத்தகங்களை வெறித்துப் பார்க்கதொடங்கினகண்கள்...பயத்தோடு படிக்க
அமர்ந்தோம்..கிட்டத்தட்ட ஆறு மாத கடின உழைப்பு.. பிற சிந்தனைகளை மறந்து நடு இரவில்
கூட சுடர் விட்டு எரிந்தது எங்களின் லட்சிய விளக்கு. பார்த்து இருந்த வேலையை விட்டதால்
பழிக்கு ஆளாகி பரிட்சைக்கு தயாரானோம்...
ஒரு வழியாக தேர்வை எழுதிவிட்டு மனதை தேற்றும் முன்னே தேடிவந்தன பிரச்சனைகள்..விடைகளில் ஆரம்பித்தவை அரசியல் விளையாட்டு
வரை சென்றது..மறு விடைகள், மறு முடிவுகள், மதிப்பெண்தளர்வு என மறுக்க முடியாத மாற்றங்கள்
மனதை சிதைத்தன...
உண்மையை சொல்லப்போனால்
தேர்வில் தோல்வியுற்றவர்களின் வலியை விட நாங்கள் பெற்றவை அதிகம்...இவ்வாறு அனைத்தையும்
தாண்டி அணையா விளக்காய் சுடர் விடுகிறது எங்கள் நம்பிக்கை..
ஆயிரக்கணக்கானவர்களின்எதிர்காலத்தை
தீர்மானிக்கப்போகும் இந்த ஆறு நாட்கள் சிலருக்கு ஆறுதலையும், சிலருக்கு வேதனையும் தரலாம்.கடவுள்
அனைத்தயும் கவனித்து கொண்டிருக்கிறார் நிச்சயம் ஒரு நாள் உழைப்புக்கான பலனை அளிப்பார்
என்ற நம்பிக்கை கொள்ளுங்கள்..
வரும் 30 ல் வரும்
முடிவை முற்றுப்புள்ளியாக கருதாமல் முன்னேற்றப்படியாக கருதுவோம்..இயன்ற வரை இன்பம்
கொடுக்க இறைவனை வேண்டுவோம்..
அனைவருக்கும் என்
இதயம் கணிந்த வாழ்த்துக்கள்....
by,
A.JAYAPRATHAPAN(Prathap
AN)
SEC.GRADE.TEACHER.







