ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தில் எம்பில் படிப்பில் சேர விரும்புபவர்கள்விண்ணப்பிக்க வரும் 25ம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் எம்.பில்., முழுநேரம் மற்றும்
பகுதி நேர கல்வியாக பல்வேறு பாடத்தலைப்புகளில் கற்றுத்தரப்படுகின்றன.
2014&15ம் கல்வி ஆண்டில் இப்பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயில கடந்த 4ம்
தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வரும் 25ம் தேதிவரை
விண்ணப்பங்கள் வழங்கப்படும் என பதிவாளர் அறிவித்துள்ளார்.
பொதுப்பிரிவினர்,
பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு ரூ.500, எஸ்சி,
எஸ்டி பிரிவினருக்கு ரு.250 கட்டணம் ஆகும். இவர்கள் ஜாதி சான்றிதழ் நகலை
இணைக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும்25ம் தேதி மாலை 5
மணிக்குள் சமர்பிக்கவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் www.tnteu.in என்ற முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.







