Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு பணியாளர் இன்று மறியல் போராட்டம்:
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இப்போராட்டத்தில் பங்கேற்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று தமிழக அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.தமிழகம் முழுவதும் 68,000 சத்துணவு மையங்கள், 35,000 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சுமார் 40 ஆயிரம் காலி பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
இதனால் ஒரு சத்துணவு அமைப்பாளர், 5க்கும் மேற்பட்ட சத்துணவு மையங் களை பார்வையிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது மற்றும் பல்வேறு கோரிக்கைகளை சத்துணவு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மறியல் போராட்டத்தில்ஈடுபடப் போவதாகவும் அறிவித்தனர். அதன்படி தமிழகம் முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடக்கிறது.
இது குறித்து தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் இணை அமைப்பாளர் வரதராஜன் கூறியதாவது:
சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளில் 40 ஆயிரம் காலி பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும். சத்துணவு திட்டத்துக்கு தனித்துறை, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். மிஷின் மோடு என்ற பெயரில் அங்கன்வாடி மையங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
கடந்த ஆட்சியில் சத்துணவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, இன்றைய முதல்வரான ஜெயலலிதா, சத்துணவு பணியாளர்களின் கோரிக்கை நியாயமானது, போராடும் நிர்வாகிகளை அரசு அழைத்து பேச வேண்டும் என்று கூறினார்.
மேலும், சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் 3 ஆண்டாகியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இதனை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இன்று காலை 10 மணியளவில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு வரதராஜன் கூறினார்.
இந்நிலையில், போராட்டத்தில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்ற அரசு �திடீர்� தடை வித்துள்ளது.
இது குறித்து சமூக நல இயக்குனரகம் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்களுக்கு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், கூற�யிருப்பதாவது:
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மறியல் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது. எனவே, மறியல் போராட்டத்துக்கு சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு அனுமதி வழங்க கூடாது.
முன் அறிவிப்பின்றி தலைமையிடத்தை விட்டு செல்லும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனுமதி பெறாமல் கலந்து கொள்ளும் பணியாளர்கள் விவரத்தினை மாவட்ட நிர்வாகம், சத்துணவுப்பிரிவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், இன்று(11ம் தேதி) குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவில் எவ்வித இடையூறு மற்றும் காலதாமதமின்றி அனைத்து மையங்களிலும் மதிய உணவு வழங்க உரிய முன்நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








