அங்கீகாரம் பெறத் தகுதி இல்லாத மழலையர் பள்ளிகள் மூடப்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


அங்கீகாரம் பெறத் தகுதி இல்லாத மழலையர் பள்ளிகள் மூடப்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி :

அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியில்லாத மழலையர் பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிடப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.மேலும், இந்தப் பணிகள் வரும் ஜனவரி மாதத்துக்குள் நடைபெறும் எனவும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வழக்குரைஞர் கே.பாலசுப்ரமணியன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: தமிழக அரசின் தொடக்கக் கல்வி இயக்குநரிடம் அனுமதி வாங்கிய பிறகுதான் மழலையர் பள்ளிகளை நடத்த வேண்டும். அதற்கு, தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் சட்டத்தின் கீழ் ஒப்புதல் பெற வேண்டும்.
ஆனால், சென்னையில் செயல்படக் கூடிய 760 பள்ளிகள் அரசின் அனுமதி பெறாமல், சட்ட விரோதமாகச் செயல்படுகின்றன. இந்தப் பள்ளிகள் பெற்றோர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது போன்ற மழலையர் பள்ளிகள் ஒப்புதல் பெறுவதற்கு விண்ணப்பிக்காமலேயே பள்ளிகளை நடத்தத் தொடங்கி விடுகின்றன. கட்டட உறுதிச் சான்றிதழ், தீயணைப்புத் துறையிடமிருந்து பாதுகாப்புச் சான்றிதழ், சுகாதாரச் சான்றிதழ் ஆகியவற்றை இந்த மழலையர் பள்ளிகள் பெறவில்லை.

எனவே, சட்ட விரோதமாகச் செயல்படும் 760 மழலையர் பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், செயல்பட்டு வரும் மழலையர் பள்ளிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முன்மை அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பிரபாகரன் ஆஜரானார்.

மேலும், அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தார். அதில், தனியார் மழலையர் பள்ளிகளில் ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, விதிகளைப் பின்பற்றாத, அங்கீகாரம் பெறாத மழலையர் பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிடப்படும்.

மேலும் இது தொடர்பாக வரும் செப்டம்பர் 14-ஆம் தேதிக்குள் மழலையர் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் பள்ளி நிர்வாகத்திடமிருந்து பதில் பெறப்படும்.

நவம்பர் 30-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளிகளை ஆய்வு செய்வர். 2015-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதிக்குள் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். ஆய்வு செய்யும்போது, பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் பள்ளிகள் அங்கீகாரம் பெற முன்மொழிந்திருந்தால் அதை சம்பந்தப்பட்ட அதிகாரி பரிசீலனை செய்வார்.

அங்கீகாரம் பெறுவதற்குத் தகுதியில்லாத மழலையர் பள்ளிகள் எனக் கண்டறிந்தால், அவற்றை உடனடியாக மூடுவதற்கு அந்த அதிகாரி உத்தரவிடுவார்.

அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அருகில் உள்ள அரசு மழலையர் பள்ளியில் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H