"பணியில் இருந்து
ஓய்வு பெற்ற பின், விருது பெறுவது என் உழைப்புக்கு கிடைத்த மரியாதையாக
கருதுகிறேன்,” என தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள
ஆசிரியை கே.நளினி கூறினார்.ராமநாதபுரம்
மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பாம்பன் தரவைதோப்பு ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியையான அவர் கூறியதாவது: மண்டபம் ஒன்றியம்
கடுக்கா வலசையில் 1988ல் முதன் முதலாக ஆசிரியர் பணியில் சேர்ந்தேன்.
கடைசியாக பாம்பன் தரவைதோப்பு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமை ஆசிரியையாக
பணிபுரிந்து, கடந்த மே 31ல் ஓய்வு பெற்றேன். பள்ளி தலைமை ஆசிரியர் பழனி
வழிகாட்டுதலின் படியும், சக ஆசிரியர்கள் ஒத்துழைப்பாலும், இந்த விருது
எனக்கு கிடைத்துள்ளது. இதற்கு முதலில் என் தாய், தந்தையருக்கு நன்றி
தெரிவித்து, அவர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். கடந்த 2012 ம்
ஆண்டு மாநில நல்லாசிரியர் விருது பெற்றுள்ளேன்.
நான் பணியில்
இருக்கும்போது இந்த தேசிய விருது கிடைத்திருந்தால், இன்னும்
மகிழ்ச்சியடைந்திருப்பேன். ஓய்வு பெற்ற பிறகு இந்தவிருது பெறுவது ' என்
உழைப்புக்கு கிடைத்த மரியாதை' என்றே சொல்வேன்







