'நாடு முழுவதும்
உள்ள பல்கலைகளில், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் நியமனம் மற்றும் பதவி
உயர்வு குறித்து வெளியான சுற்றறிக்கை போலியானது' என, பல்கலை மானியக் குழு
(யு.ஜி.சி.,) தெரிவித்துள்ளது.
கடந்த
ஜூலை, 15ம் தேதி, எம்.பில்., பி.எச்டி., மற்றும் எம்.டெக்., படிப்புகளை
நடத்தும், அனைத்து அரசு, தனியார், நிகர்நிலை, திறந்தநிலை மற்றும் மத்திய
பல்கலைகளில், இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பதவி உயர்வு,
நியமனம் தொடர்பாக, யு.ஜி.சி., பெயரில், தோரத் என்பவர் வெளியிட்டதாக, ஒரு
சுற்றறிக்கை வெளியாகியிருந்தது. இந்த சுற்றறிக்கை, சில பல்கலைகள்,
கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. 'இந்த சுற்றறிக்கை போலியானது. இதற்கு
எவ்வித அங்கீகாரமும் கிடையாது' என, யு.ஜி.சி., தற்போது அறிவித்துள்ளது.







