நாங்களும்
ஒரு ஆண்டாக முதுகலை ஆசிரியர்
தேர்வு எழுதி இறுதி பட்டியலுக்கு
காத்து கொண்டு இருக்கிறோம்.தினமும்
ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றி
மட்டுமே இணையதளங்கள் மற்றும் பத்திரிக்கைகள் செய்திவெளியிடுகின்றன. எங்களை அனைவரும் மறந்தே
விட்டனர்.ஆசிரியர்
தகுதித் தேர்வு இறுதி பட்டியலுக்கு
காத்து இருப்பவர்களை விட மிகவும் கொடுமையானது
எங்கள் நிலைமை.
எங்களுடன்
தேர்வு எழுதிய தமிழ் நண்பர்கள்
பணியில் சேர்ந்து பல மாதங்கள் ஆகியும்
இதுவரை எங்களுக்கு இறுதி பட்டியல் வெளியிடாமல்
இருக்கிறார்கள்.முதலில்
வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறி
வந்தனர். இப்போது தான் வழக்குகள்
முடிந்து விட்டது. தீர்ப்புகளும் வழங்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.
பின்னர்
எதற்கு இந்த காலதாமதம்?
ஏன் எங்களுக்கு இறுதி பட்டியல் வெளியிடாமல்
இருக்கிறார்கள்?
தமிழ் பாடத்திற்கு அவசரமாக இறுதி பட்டியல்
வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏன்
இதுவரை வழக்குகள் முடிந்து தீர்ப்புகளும் வெளியிட்டுள்ள பாடப்பிரிவுகளுக்கு இறுதி பட்டியல் வெளியிட
தயக்கம் காட்டி வருகிறது?
தமிழுக்கு
மட்டும் பணிநியமனம் தர முடிவு செய்தவர்கள்
எதற்கு மற்ற பாடங்களுக்கு தேர்வு
வைத்தார்கள்?
பதில் சொல்ல வேண்டியவர்கள் "புராசஸ்
கோயிங் ஆன்" என்கிறார்கள்.
என்று தான் எங்களுக்கு விடிவு
காலம் வருமோ