முதுகலை
ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், இறுதி
பட்டியலை வெளியிடக்கோரி, நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வுவாரியம்) அலுவலகத்தைமுற்றுகையிட்டனர்.தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட,
பல மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட தேர்வர்கள்,
நேற்று காலை, சென்னை நுங்கம்பாக்கத்தில்
உள்ள டி.ஆர்.பி.,
அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இறுதி தேர்வு பட்டியலை
வெளியிடக்கோரி, தேர்வர்கள், கோஷம் எழுப்பினர். பின்,
சில தேர்வர்கள், டி.ஆர்.பி.,
உறுப்பினர், அறிவொளியை சந்தித்து, இறுதி பட்டியலை வெளியிட
வலியுறுத்தினர்.

மற்ற பாடங்களுக்கு, இறுதி
பட்டியல் வரவில்லை. ஆசிரியர் தகுதித்தேர்வு, இறுதி பட்டியல், விரைவில்
வெளியாக உள்ளது. அத்துடன் சேர்த்து,
முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலையும் வெளியிட
வேண்டும். இவ்வாறு, தேர்வர்கள் கூறினர்.
இதுகுறித்து, அறிவொளிகூறுகையில், ''பட்டதாரிஆசிரியர்தேர்வுபட்டியல்வெளியிட்டதும்,
முதுகலைஆசிரியர்தேர்வுபட்டியல்வெளியிட,
நடவடிக்கைஎடுக்கப்படும்,'' என்றார்.







