அற்பமாக
இருக்கும் இந்த உலகத்தை சிற்பமாக
செதுக்கும் சிற்பிகள் நாங்கள்....
களிமண்ணாக
இருக்கும் மனிதனை நல்ல மண்பாண்டமாக
மாற்றும் குயவர்கள் நாங்கள்...
ஓடுகள்
சுமக்கும் கைகளை ஏடுகள் பிடிக்கச்சொல்லி
அச்சாரத்தை போட்ட
நாடும்,வீடும் உறுதியாக இருக்க
வேண்டுமானால் அதன் அஸ்திவாரம் ஆணித்தரமாக
இருக்க வேண்டும்..அதுபோல கல்வித்துறையின் ஆணிவேராக
இருக்கும் இடைநிலை ஆசிரியர்களை (Paper 1) அரசும், ஆசிரியர்
தேர்வுவாரியமும் புறக்கணித்து விட்டதே!! எங்களின் மனதை குழிதோண்டி புதைத்து
விட்டதே!!
இதனால்
பலர் காணாமல் போய்விட்டனர்...
காணவில்லை
பெயர்
: இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட அறிக்கை.
ஊர் : தமிழ்நாடு.
படிப்பு
: ஆசிரியர் பட்டய படிப்பு(D.T.Ed)
நிறம்
: வறுமையின் நிறம்.
அடையாளம்
:2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
தாள்1 தேர்ச்சி பெற்று இருப்பார்...
என் அன்புச்செல்வமே! (தாள்1 காலிப்பணியிட அறிக்கை)
ஆரம்பப் பள்ளியின் அஸ்திவாரமே!!
நீ காணாமல் போன நாளிலிருந்து
இன்று வரை சரிவர சாப்பிடவில்லை,
கண்களுக்கு தூக்கம் இல்லை, மனதுக்கு
நிம்மதி இல்லை...
சில மாதங்களுக்கு முன்பு 884 பணியிடத்தில் இருப்பதாக சிலர் சொன்ணார்கள் நானோ
பரிதவித்தேன்,பார்க்கத்துடித்தேன்...
சில நாட்களுக்கு முன் சில தொலைக்கட்சியிலும்,
சில நாளிதழ்களிலும் நீ 4,224ம் பணியிடத்தில்
இருப்பதாக பதறிய நெஞ்சில் பால்
வார்த்தார்கள்..
உடனே உன்னை காணவேண்டும் என்று
ஏறாத மலைகள் இல்லை, போகாத
கோவில் இல்லை,வேண்டாத தெய்வம்
இல்லை அப்பொதும் சொன்ன தேதியில் உன்னை
காண முடியவில்லையே..!!
என் கண்ணே, என் மணியே,
எங்கள் குலவிளக்கே இப்போது எங்கே இருக்கிறாய்,
எத்தனை பணியிடங்களில் இருக்கிறாய், எப்போது வருவாய்...
உன்னை காணாமல் உன் அம்மாவாகிய
நானும் நம் உறவினர்களாகிய தாள்1ன் 30,592 பேரும் நம் வீட்டின்
வாசலில் (
www.trb.tn.nic.in ) காத்துக்கொண்டிருக்கிறோம்....
கண்டுபிடித்து
தருபவர்களுக்கு தக்க பரிசு வழங்கப்படும்
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி...
P.Rajalingam..
Puliangudi..Tirunelveli...







