விழுப்புரம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை
சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சாற்றல் மற்றும்
படைப்பாற்றலை வளர்க்கும் கவிதை, பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட
உள்ளன. மாவட்ட அளவிலான 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வரும் 9ம் தேதி
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணிக்கு போட்டிகள்
நடத்தப்படுகிறது. ஒரு பள்ளியிலிருந் தும் ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம்
மூன்று பேர் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும்
மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம்
வழங்கப்படும்.
அதே போல் கல்லூரி மாணவ,
மாணவிகளுக்கு வரும் 1ம் தேதி விழுப்புரம் அறிஞர் அண்ணா அர சு கலைக்
கல்லூரியில் போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசாக
ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரமும் வழங்கப்படும். ஒவ்வொரு
கல்லூரியிலிருந்தும் ஒரு போட்டிக்கு ஒருவர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை
வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







