மத்திய பணியாளர்
தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(டி.என்.பி.எஸ்.சி.) ஆகிய போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சியை
மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி ஞாயிற்றுக்கிழமை (செப்.28)
தொடங்கிவைக்கவுள்ளார்.
இதுகுறித்து
மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. ஆகிய
போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற விரும்பும் இளைஞர்களுக்கு இலவசமாகப்
பயிற்சி வகுப்புகளை சென்னை மாநகராட்சி நடத்துகிறது.
இந்தப் பயிற்சிகள்
சைதாப்பேட்டை, பந்தர் கார்டன் ஆகிய மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில்
நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகளை
செனாய் நகர் மாநகராட்சி கலையரங்கத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10
மணிக்கு மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைக்கிறார்.
ஏற்கெனவே விண்ணப்பம் அனுப்பியவர்கள் தவிர இதுவரை விண்ணப்பம் அனுப்பாதவர்களும் பயிற்சியில் நேரடியாகச் சேரலாம்.







