'சென்னை பல்கலை
தொலைதுார கல்வி இயக்க, இளங்கலை பட்டப்படிப்பு, டிசம்பர் மாத தேர்வுக்கு,
அபராதம் இல்லாமல், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என,
தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த அறிவிப்பு:
சென்னை
பல்கலையின் தொலைதுார கல்வி இயக்ககம் சார்பில், இளங்கலை
பட்டப்படிப்புகளுக்கு டிசம்பரில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இத்தேர்வுகளுக்கு, அபராத கட்டணம் இன்றி, இம்மாதம், 30ம் தேதிக்குள்ளும்,
அபராதத்துடன் அக்., 15ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக,
ஆன் - லைனில் விண்ணப்பிப்பதுடன், அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து,
அதனுடன், பணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதையும் இணைத்து, சமர்ப்பிக்க
வேண்டும். ஆன் - லைனில் பதிவு செய்யாதவர்கள், தேர்வெழுத அனுமதிக்கப் பட
மாட்டார்கள்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.







