துணை மருத்துவப் பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளது. செவிலிய
உதவியாளர் உள்ளிட்ட 16 துணை மருத்துவ சான்றிதழ் படிப்புகள், கண்
மருத்துவம் உள்ளிட்ட 8 பட்டயப் படிப்புகள் என மொத்தம் 24 படிப்புகளுக்கான
விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக்
கல்லூரிகளிலும், சென்னை கிங் மருத்துவ ஆராய்ச்சி மையத்திலும்
விண்ணப்பங்களைப் பெறலாம்.
விண்ணப்பங்களை www.tnhealth.org, www.tngov.in ஆகிய
இணையதளங்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப விநியோகத்துக்கான
கடைசித் தேதி அக்டோபர் 13 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
அக்டோபர் 14-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.படிப்பில் சேர தகுதி
உள்ளவர்களின் பெயர்ப் பட்டியல் அக்டோபர் 24-ஆம் தேதி வெளியிடப்படும்.
அக்டோபர் இறுதி வாரத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என
தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.







