Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
KALVIKURAL WISHES
கனவு ஆசிரியர் - வாய்ப்பாட்டில் வசப்படுத்தும் ஆசிரியர்-கல்விக்குரலின் மனமார்ந்த வாழ்த்துக்கள்:
கனவு ஆசிரியர் - வாய்ப்பாட்டில் வசப்படுத்தும் ஆசிரியர்-கல்விக்குரலின் மனமார்ந்த வாழ்த்துக்கள்:
தலைகீழா நின்னு மனப்பாடம் பண்ணினாலும் வாய்ப்பாடு மறந்துபோய்விடுகிறதா? கவலையை விடுங்கள். ஆசிரியர் சங்கர், தன்னிடம் படிக்கும்
மாணவர்களுக்கு சொல்லிகொடுக்கும் புதிய ஐடியாவை நீங்களும் பின்பற்றினால்,
வாய்ப்பாடு உங்கள் வசம்.
வேலூர் மாவட்டம், ராமநாயக்கன்பேட்டை தொடக்கப் பள்ளியில்
ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர் சங்கர். இப்போது, ராமநாயக்கன்பேட்டை
அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார். எந்தப் பள்ளியில்
பணியாற்றினாலும் இவரது வகுப்பை மாணவர்கள் ஆர்வமாக எதிர்பார்ப்பது வாடிக்கை.
'குறைந்த விலையில் கிடைக்கும் ஆடியோ பிளேயரில்...
வாய்ப்பாடு, ஆங்கில இலக்கணப் பயிற்சிகளை மாணவர்களைச்
சொல்லவைத்து பதிவுசெய்வேன். மதிய உணவு இடைவேளையில் அதை ஒலிபரப்பி,
எல்லோரையும் கேட்கவைப்பேன். உதாரணத்துக்கு... ஆறாம் வாய்ப்பாடு என்றால், 1
ஙீ6= என்று மட்டும் ஆடியோவில் ஒலிக்கும். அதைக் கேட்கும் மாணவர்கள்,
அதற்குரிய விடையைச் சொல்வார்கள். ஒரு சிலருக்குத் தெரியாமல் இருந்தாலும்
மற்றவர் சொல்லும்போது தெரிந்துகொள்வார்கள். இதைத் தினமும் கேட்கும்போது,
மாணவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்'' என்கிறார் சங்கர்.
மாணவர்களை சாதிக்கத் தூண்டுவதில் மட்டும் அல்ல, இவரே
ஒரு சாதனையாளராக விளங்குகிறார். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆண்டுதோறும்
அளிக்கும் இன்னோவேட்டிவ் டீச்சர்ஸ் லீடர்ஷிப் ((Innovative Teachers
Leadership)) விருதைப் பெற்றிருக்கிறார்.
''2006-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகள்
இந்தப் போட்டியில் மாநில அளவு விருதுகளைப் பெற்றுவந்தேன். 2009-ம் ஆண்டு
இந்தியாவில் இருந்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
போட்டியில் தேர்வாகிய ஆறு ஆசிரியர்களில் நானும் ஒருவன்'' என்கிறார்.
இந்தியாவில் இருந்து தேர்வாகிய ஆறு பேரையும் பிரேசில் நாட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு அழைத்துச்சென்றனர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினர்.
தமிழக அரசு கொண்டுவந்த ஏ.பி.எல் அட்டைக்கான பணி,
எஸ்.எஸ்.ஏ வில் வெளியிடும் டிவிடி-கள் என்று இவரின் பங்களிப்புப் பட்டியல்
நீண்டுகொண்டே செல்கிறது. பள்ளியின் இளம் செஞ்சிலுவைச் சங்கத்தின்
பொறுப்பாளராகவும் இருக்கிறார்.
''பாடங்களைப் படங்கள் வழியாகச் சொல்லிக்கொடுத்தால்,
எளிதாகப் புரிவதோடு, மனதில் ஆழமாகப் பதியும். எனவே, அந்த முறையைப்
பயன்படுத்தி, பாடம் நடத்த ஒரு விரிவான முயற்சியில் இருக்கிறேன். இது,
மாணவர்களுக்கும் பாடங்கள் மீது அதிக ஆர்வத்தை உண்டாக்கும்'' என்கிற
ஆசிரியர் சங்கரின் குரலில் ஒளிர்கிறது நம்பிக்கை.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








