ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி.26 ராக்கெட்
வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர்
நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.கடல்வழிப்பாதை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பணிக்கான செயற்கைக்கோளான
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சியுடன், பிஎஸ்எல்வி சி.26 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா
விண்வெளி மையத்தில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை 1.32 மணியளவில்
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஏவுகணை சோதனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, "இஸ்ரோ
விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள். ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி
செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி.26 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த
தருணம் மகத்தானது, நாட்டுக்கு மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்படுத்தி
தந்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.







