தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டிகள் நடந்தன.தமிழ்நாடு
டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள சீர்மிகு
சட்டப்பள்ளியின் மாதிரி நீதிமன்ற குழுமம் மற்றும் தமிழ்நாடு மாசு
கட்டுப்பாடு வாரியம் சார்பில் 8வது தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி
நடந்தது. மாதிரி நீதிமன்ற போட்டியை உயர் நீதிமன்ற நீதிபதிகள்
ஜெயச்சந்திரன், மகாதேவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
போட்டியில்,
இந்தியா முழுவதிலும் உள்ள சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் சட்டக் கல்லூரி
மாணவ, மாணவிகள் 37 குழுக்களாக கலந்து கொண்டனர். சாஸ்த்ரா பல்கலைக்கழக
சட்டக்கல்லூரி அணியினர் முதல் பரிசையும், இரண்டாம் பரிசை பெங்களூர் ராமையா
சட்டக்கல்லு�ரி மாணவ, மாணவியர்களும் தட்டிச்சென்றனர்.
உயர்
நீதிமன்ற நீதிபதிகள் ராமசுப்பிரமணியம், எம்.எம்.சுந்தரேஷ், புஷ்பா
சத்தியநாராயணா ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். விழாவில், மாசு
கட்டுப்பாடு வாரிய தலைவர் ஸ்கந்தன், பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி,
சீர்மிகு சட்டப்பள்ளி இயக்குனர் (பொறுப்பு) நாராயணப்பெருமாள் உள்பட பலர்
கலந்து கொண்டனர்.







