அறநிலையத்துறை உதவி
ஆணையர் பதவிக்கான நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் 2 நாள்
நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் காலியாக உள்ள 4 உதவி ஆணையர்
பதவியை நிரப்ப கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இத்தேர்வுக்கு 507 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 415 பேர் எழுத்து
தேர்வில் பங்கேற்றனர். இவர்களுக்கு கடந்த மார்ச் 8, 9ம் தேதிகளில் எழுத்து
தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தேர்வுக்கு 12 பேர்
தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 27ம்
தேதியும், நேர்காணல் தேர்வு 28ம் தேதியும் நடைபெறும். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.







