’பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர், நவ., 7ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம்’ என, பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அறிவித்துள்ளது. வரும்
2015 மார்ச்சில் துவங்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவ,
மாணவியர் பற்றிய முழு விவரங்கள், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம்
சேகரிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு வருகிறது.
மேலும்,
எட்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்து, 14 வயது நிரம்பிய தனித்தேர்வர்களும்
இத்தேர்வை எழுதலாம். அவர்கள் உரிய அசல் கல்வி, பிறப்பு சான்றிதழ்களுடன்,
அரசு தேர்வு சேவை மையங்களில் பாடவாரியாக தேர்வுக் கட்டணத்தை செலுத்தி, நவ.,
7ம் தேதிக்குள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என, பள்ளிக்கல்வி தேர்வுத்துறை
தெரிவித்து உள்ளது.







