Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
CBSC NEWS
விதிமீறும் சிபிஎஸ்இ பள்ளிகள் : 'நடவடிக்கை எடுக்கப்படும்' - இயக்குநர் ராமேஸ்வர முருகன்:
விதிமீறும் சிபிஎஸ்இ பள்ளிகள் : 'நடவடிக்கை எடுக்கப்படும்' - இயக்குநர் ராமேஸ்வர முருகன்:
தமிழகத்தில் தனியார்
மெட்ரிக் பள்ளிகள் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பதாக புகார் இருந்தது.
தற்போது அந்நிலை மாறி, தற்போது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ)
மற்றும் இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் வாரியத்தின் (ஐசிஎஸ்இ) கீழ்
செயல்படும் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள்
எழுந்துள்ளன. தவிர, இப்பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை
நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில்
சென்னைக்கு அடுத்ததாக, பள்ளி, கல்லூரிகள் அதிக அளவில் உள்ள நகரமாக கோவை
மாவட்டம் உள்ளது. கோவை மாவட்டத்தில் சுமார் 275-க்கு மேற்பட்ட மெட்ரிக்
பள்ளிகள் உள்ளன. தவிர சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ வாரியங்களின் கீழ் 50-க்கு
மேற்பட்ட பள்ளிகள் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.
"சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ
ஆகிய வாரியங்களின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும்
அதிகாரியாக பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்படுவார்' என்று சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து,
அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் இப்பள்ளிகளுக்கு அங்கீகாரம்
வழங்குவதற்கான முதற்கட்டப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
"தமிழக அரசின்
கல்விக் கட்டண நிர்ணயச் சட்டம், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளையும்
கட்டுப்படுத்தும்' என்றும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
தனிடையே, கோவையில்
உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான மாணவர்
சேர்க்கையை முன்கூட்டியே தொடங்கும் வகையில் தற்போது விண்ணப்பங்களை அளித்து
வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தமிழக
அரசின் கல்விக் கட்டண நிர்ணயச் சட்டத்தின் கீழ் அல்லாமல் கூடுதலாக கல்விக்
கட்டணம் வசூலிப்பதாகவும், எல்கேஜி வகுப்புக்கு கல்விக் கட்டணம், நன்கொடை என
சுமார் ரூ. 1 லட்சம் வரை வசூல் செய்வதாகவும், பெயர் குறிப்பிட விரும்பாத
பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.
விதிமீறும் சிபிஎஸ்இ
பள்ளிகள்: அதேநேரத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரிய விதிகளின்படி,
பள்ளிகளுக்கு முதல் வகுப்பில் இருந்து 12- ஆம் வகுப்பு வரை வகுப்புகள்
நடத்த மட்டுமே இணைப்பு வழங்கப்படுகிறது.
சிபிஎஸ்இ
விதிமுறைகள் இவ்வாறிருக்க, எல்கேஜி, யுகேஜி போன்ற மழலையர் வகுப்புகளுக்கு
எவ்வாறு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில்
ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கை என்பது, அந்த வருடத்தின்
தொடக்கத்தில், அதாவது பிப்ரவரி மாதத்தில் தான் தொடங்குகிறது. அதே நேரத்தில்
சிபிஎஸ்இ பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்து தான் வகுப்புகளை நடத்த
இணைப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில்,
எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு எந்த அடிப்படையில் சிபிஎஸ்இ பள்ளிகள்
மாணவர் சேர்க்கை நடத்துகிறன என்பது கேள்விக்குறியாக உள்ளதாக
கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
இயக்குநர் விளக்கம்:
இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகனிடம்
கேட்டபோது, "சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு
முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து விசாரித்து நடவடிக்கை
எடுக்கப்படும்' என்றார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








