சட்டக் கல்லூரி
விரிவுரையாளர்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம்
புதன்கிழமை வெளியிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in
என்ற இணையதளத்தில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அரசு சட்டக்
கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள் 44 பேரைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு
ஜூலை 22-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர்
21-ஆம் தேதி நடைபெற்றது.
மாநிலம் முழுவதும்
இந்தத் தேர்வை 264 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இப்போது
வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 1:2 என்ற
விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு தேர்வர்கள் அழைக்கப்பட உள்ளனர்.
இவர்களிலிருந்து நேர் காணலுக்கு அழைக்கப்படும் தேர்வர்களின் விவரங்கள்
விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.