Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
சில ஆயிரங்களுக்கு ஆசைப்பட்டு இலவச "லேப்-டாப்'களை விற்கும் மாணவர்கள்:
இலவச "லேப்-டாப்' பெறும் மாணவர்களில் சிலர், சில ஆயிரம் ரூபாய்க்கு ஆசைபட்டு அவற்றை விற்று, ஏமாறுகின்றனர். இலவச
பாடப்புத்தகம், சீருடை, சைக்கிள், லேப்-டாப் என 16 வகையான கல்வி
நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், பிளஸ் 2
முடிக்கும் மாணவ, மாணவியரின் கல்லூரி படிப்புக்கு உதவும் வகையில்,
ஆண்டுதோறும் இலவச லேப்-டாப் வழங்கப்படுகிறது.நடப்பு கல்வியாண்டில்,
திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 13,389 மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப்
வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 21.42 கோடி
ரூபாய்.சில மாணவ, மாணவியர் லேப்-டாப் பயன்படுத்த அக்கறை
காட்டுவதில்லை. நண்பர்களுடன் பொழுதை கழிக்கவே விரும்புகின்றனர். அவ்வாறான
மாணவர்கள், இலவசமாக கிடைத்த லேப்-டாப்பை, விலைக்கு விற்கின்றனர். 6,000
முதல் 8,000 ரூபாய் வரை, அந்த லேப்-டாப் விற்கப்படுகிறது.
கல்லூரி மாணவ,
மாணவியர் மட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரியில் உள்ள சில ஆசிரியர்களும்,
இலவச லேப்-டாப்களை விலைக்கு வாங்கிக்கொள்வது தெரியவந்துள்ளது. கல்லூரி
மாணவர்கள் சிலர், விற்பனை பிரதிநிதி போல் செயல்பட்டு, தங்கள் பகுதியில்
பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியரிடம் பேரம் பேசி, லேப்-டாப்களை குறிப்பிட்ட
விலையில் வாங்குகின்றனர்.பெற்றோரில் சிலர், போதிய கல்வியறிவு பெறாத கூலி
தொழிலாளர்களாக உள்ளனர். லேப்-டாப் பற்றி முழுமையாக அறியாததால், ஆடம்பரப்
பொருளாக கருதுகின்றனர். குடும்ப வறுமை கருதி, லேப்-டாப்பை விற்குமாறு,
பிள்ளைகளை வற்புறுத்துகின்றனர். குடும்பத்தேவை மற்றும் கடன் பிரச்னைக்காக
சில மாணவ, மாணவியர் லேப்-டாப் விற்க, பெற்றோரும் காரணமாக
உள்ளனர்.அதேநேரத்தில், மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதோடு, கடமை
முடிந்து விட்டதோடு, கல்வித்துறை அதிகாரிகள் நினைக்கின்றனர். அதை மாணவர்கள்
பயன்படுத்துகிறார்களா அல்லது விற்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.
குமார் நகர்
மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரனிடம் கேட்டபோது, ""நடப்பாண்டில்,
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்-டாப், அனைத்துவசதிகளையும் கொண்ட "லேட்டஸ்ட்
மாடலாக' உள்ளது; மாணவர்கள், அதை பொக்கிஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். சில
மாணவர்கள், அதன் அருமை தெரியாமல், பணத்துக்கு ஆசைப்பட்டு விற்று
ஏமாறுகின்றனர். இதுதொடர்பாக, மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள்
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








