'ரேண்டம் எண்', பிறந்த தேதி என்பது அதிர்ஷ்டத்தை பொறுத்தது. இது ஏற்புடையதல்ல. 'ரேண்டம்', பிறந்த தேதிக்கு முன்னுரிமை அளிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்குப் பதிலாக, பிளஸ் 2 தமிழ் பாடத்தில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதை, 2015 - 16ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கையில் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக்குழு செயலருக்கு மனு அனுப்பி உள்ளேன். இதற்கு, உரிய நடவடிக்கை எடுக்க, அரசு தரப்பிற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்திருந்தார். இம்மனு, நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி கொண்ட, 'பெஞ்ச்' முன் நேற்று, விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், வெங்கடேஷ் ஆஜரானார். நீதிபதிகள், 'இதை பொதுநல வழக்காக ஏற்க முடியாது. எனவே, இம்மனு, தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றப்படுகிறது' என்றனர்.