வேலூர் மாவட்டம்,
திமிரி ஒன்றியத்தை சேர்ந்த தொடக்கக்கல்வித்துறையின் கீழுள்ள ஊராட்சி ஒன்றிய
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 34 இடைநிலை ஆசிரியர்கள்
தமிழக அரசின் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய கோரி
வழக்கு(W.P.2470/2013) தொடர்ந்தனர்.
அவ்வழக்கு நீதியரசர்
சந்துரு அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அதை நீதிமன்றம்
தள்ளுபடி செய்தது. இதையடுத்து 34 ஆசிரியர்கள் வழக்கு தள்ளுபடி
செய்யப்பட்டதை எதிர்த்து மறுசீராய்வு மனுவை தாக்கல் சென்னை
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அவ்வழக்கு
(REV.APPLW.300/2014) இன்று நீதிமன்ற எண்.10 நீதியரசர்.சுந்தரேஷ் அவர்களின்
முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்று கொண்ட நீதிமன்றம் 8
வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







